நீல இரத்தம் episode 5

 மறுநாள் காலை


சுபாஷ் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தான்..

அவன் வீட்டிற்கு பக்கத்தில் ஒரே கூட்டமாகவும் சலசலப்பாகவும் இருந்தது.. 

என்னவென்று பார்க்க ஆவலாக சென்றான். 

கூட்டத்தை விளக்கி கொன்டு எட்டி பார்த்தான்.

பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து போனான்... 

ரத்த வெல்லத்தில் இருவர் முகம் சிதைந்த நிலையில் கிடந்தனர்.. 

தூரத்தில் போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டது.. 

சுபாஷ் கொலை நடந்த இடத்தை நோட்டம் விட்டான்.. 

ஒரு இடத்தில் நீல நிறத்தில் ஒரு செடியில் வழிந்தோடி கொண்டு இருந்தது

அதற்குள் சந்திர போஸ் துரித நடவடிக்கையில் ஈடுபட்டார் 

இறந்தவர்கள் யார்
ஏதும் துப்பு கிடைக்கிறதா என்று விசாரித்து கொண்டார்.

யாரை கேட்டும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. 

ஒரு நிமிடம் சுபாஷ் ஐ பார்த்ததும் 

சுபாஷ்... என்று கூப்பிட்டார்

சுபாஷ் விரைந்தான். 

சொல்லுங்க sir.... 

இங்க என்ன பண்ற என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

இங்க தான் என் வீடு அதோ அங்க இருக்கு பாருங்க என்று அவன் வீட்டை காட்டினான்.. 

அப்படியா சரி சரி.. ஆமா நீ தான் நல்ல இன்வெஸ்டிகேசன் நல்லா பண்ணுவியே இந்த கொலையை பத்தி என்ன நினைக்கிற என்று சற்று கிண்டலாகவே கேட்டார்.. 

கொலை தான் sir. But கொலை பண்ணவன் தான் கொஞ்சம் விசித்திரம்மா இருப்பான் போல என்று சொன்னான்..

கொஞ்சம் அசந்து போனவர் எப்படி சொல்ற என்று கேட்டார்..

1st செத்தவங்க 2 பேர் உடம்புலயும் விஷம் ஏறி இருக்கு. ஆனாலும் அடிச்சு முகத்தை சேதச்சு. இருக்காங்க.. 

விஷமா... 

ஆமா sir உடம்பு பாருங்க blue கலர் ல இருக்கு

அட ஆமா. நானும் கவனிக்க மறந்துட்டேன்..

அதை விட இன்னொரு விசயம் நெருடலா இருக்கு sir

என்ன என்று கேட்டார்

கொலை பண்ணவன் ரத்தமும் நீல கலர் ல இருக்கு.. என்று சுபாஷ் சொல்லிக்கொண்டே ஒரு காகிதத்தில் எடுத்து வைத்த நீல கலர் ல ஒரு திரவத்தை காட்டினான்.

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் ஆடி போனார்..

அத விட இந்த கொலைகள் தொடரும் sir.. என்று சுபாஷ் சொன்னான்..

எப்படி என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்

சுபாஷ் சொல்லச்சொல்ல 
இரத்தம் உறைவது போல இருந்தது இன்ஸ்பெக்டர் க்கு....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் - part 2