நீல இரத்தம் - part 2
தூரத்தில் ஜனாவின் அம்மா வருவதை பார்த்து கொஞ்சம் பயம் கலந்த கலக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தார்கள் இருவரும்
ஜனா அம்மா ஏதோ கத்தி கொண்டே வந்தாள் அருகே வர வர கொஞ்சம் கொஞ்சமாக கேட்டது
டேய் அங்க இருக்காதீங்க டா பாம்பு இருக்காம்
என்று கத்தி கொண்டே வந்து கொண்டு இருந்தார்கள்
கொஞ்சம் நிம்மதியாக இருவருக்கும் இருந்தது
அவர்கள் அருகே வந்ததும் ஜனா சொன்னான்
அது செத்த பாம்பு மா என்று சொல்லிக்கொண்டே
குச்சியை கையில் எடுத்து அதை அலேக்காக தூக்கினான்
பக்கத்தில் இருந்த அக்கா
ஐயோ தலை அசையுது பாருன்னு கத்தி கூக்குரல் இட்டாள்..
பிறகு ஒருவழியாக இருவரையும் நம்ப வைத்து அதை தூக்கி தூர எரிந்து விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்....
குளித்து முடித்து விட்டு பள்ளி செல்ல தயாரானார்கள்...
கூட இன்னும் 3 friends சேர்ந்து கொண்டார்கள்... செல்லும் வழியில் நடந்த கதைகளை சொல்லலிகொண்டும் சிரித்து கொண்டும் சென்றார்கள்...
School 1st bell அடிச்சத்தும் அனைவரும் class க்கு சென்றார்கள்..
1st பீரியட் தமிழ் வாத்தியார் வந்து கொண்டு இருப்பதை பார்த்ததும் வகுப்பு தலைவன் சுபாஷ் sir வரார் என்று சொன்னதும் வகுப்பறை அமைதி ஆனது.... துளி சத்தமும் வர வில்லை..
அவர் உள்ளே வந்ததும்
வணக்கம்.......... அய்யா......... என்று ராகம் பாடினார்கள்..
மாரிமுத்து sir அனைவரும் அமரும்படி சைகை காட்டினார்...
அவர் கனத்த குரலில் எல்லாரும் நான் சொன்ன கட்டுரை எழுதிட்டு வந்துட்டீங்களா என்று கேட்டார்
முடிச்சுட்டோம் என்று ஒருமித்த குரலில் எல்லாரும் சொன்னாலும் சிலர் வாய் திறக்காமல் பிதுக்கா பிதுக்கா என்று முழித்தார்கள்..
சரி அதை நான் கடைசியா பாக்றேன் என்று சொன்னவர்.
எல்லாரும் முதல் பக்கம் எடுங்கள் என்றார்...
அவைவரும் வேகமாக papper புரட்டும் சத்தம் கேட்டது..
ஒரு சின்ன detail உங்க கிட்ட சொல்றேன் கட்டுரை நோட் ல முதல் பக்கம் பெயர் எழுதுவதற்கும் 2 வது பக்கம் கட்டுரை தலைப்பு எழுதவும் பயன்படும் எப்பவும் கட்டுரை ஆரம்பிக்கும் போது முத்துசாமி sir கட்டுரை தலைப்பை எழுத சொல்லுவார்...
இப்போது ஒவ்வொருவராக பார்த்து கொண்டு வந்தார் அனைவரும் கட்டுரை தலைப்பை எழுதும் பக்கத்தை வைத்து இருந்தார்கள்.. சுபாஷ் மற்றும் அவன் நண்பன் ஜனா மட்டும் பெயர் எழுதும் பக்கத்தை எடுத்து வைத்து இருந்தார்கள் அவர்கள் இருவரையும் கனத்த குரலில் 2 பெரும் எழுந்தரிங்க என்று சொன்னார் அதே போல் பின்னாடி ஒருவனை எழுப்பினார்
ஜனா சொன்னான் போச்சு நாம தப்பா எடுத்து வச்சுட்டோம் நமக்கு அடி confirm என்று சொன்னான்..
சுபாஷ் sir முதல் பக்கம் அது தானே என்று சொல்ல நினைத்தான் ஆனால் பயம் அவனை அடக்கி ஆட்கொண்டது..
வேறு வழி இல்லாமல் பயத்தோடு நின்றார்கள்..
பின் முத்துசாமி sir board முன்னாடி போய் நின்று நிக்கிற3 பேரும் உட்காருங்க உட்கார்ந்து இருக்கிற எல்லாரும் எந்தரிங்க என்று சொன்னார்..
மூவரும் கொஞ்சம் சந்தோசமாக உட்கார்ந்தார்கள்
பிரம்பை கையில் எடுத்தவர்
உங்களை முதல் பக்கம் தான எடுக்க சொன்னேன் என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் அடி கொடுத்து கொண்டே வந்தார் ..
அப்படி அடி விழுந்து இருந்ததால் தான் இப்போ 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் perfect மற்றும் ஒழுக்கமாகவும் இருக்கிறார்கள் இப்பொழுது அடித்தால் ஏன் திட்டினால் கூட புகார் கொடுக்கிறார்கள்..
சரி கதைக்கு வருவோம்
அடிகொடுத்து முடித்ததும் கட்டுரை யார் யார் எழுதலை என்று கேட்டார்..
கேட்டு முடிப்பதற்குள் வெளியே சலசலப்பு சத்தமும் கொஞ்சம் அதிகார குரலும் கேட்டு கொண்டு இருந்தது அவர் என்னவென்று பார்க்க வெளியே சென்றார் அனைவரும் கொஞ்சம் நிம்மதியானர்கள் ஜனா பாதி எழுதாமல் விட்டதை சுபாஷ் note ஐ பார்த்து எழுதி கொண்டு இருந்தான் அப்போ அவன் note ல ஏதோ acid பட்ட மாதிரி இருந்தது
சுபாஷ் டேய் என்னடா அது எப்படி ஆச்சு என்று கேட்டான் கடைல நேத்து வாங்கும் போது அப்படி தாண்டா இருந்துச்சு இதுக்கு 2 ரூபா கம்மியா வங்கிக்கிட்டார் டா நம்ம ஸ்கூல் கு முன்னாடி இருக்கிற அந்த கடைல இருக்கிற அண்ணன்
என்று சொன்னவன் சுபாஷ் ஏதோ சொல்ல வந்தான் அதுக்குள்ள வெளிய கூட்டமா எல்ல மாணவர்களும் வெளியே வருவதை பார்த்ததும் இவர்களும் வெளியே செல்ல ஆயத்தமானர்கள்
வெளியே வந்த சுபாஷ் குழப்பம் ஆனான் அங்கே police நின்று கொண்டு இருந்தது...
தொடரும்..........
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry