நீல இரத்தம் episode 14
நீல இரத்தம் episode 14 போலீஸ் சுபாஷ் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் மெதுவாக வெண்ணிலாவை தூக்கினான் கொஞ்சம் சிரமமாக இருந்தது ஒரு வழியாக ரோட்டோரமாக கொண்டு வந்தான்.. அங்கே அடிபம்பு இருந்தது அதை நோக்கி சென்றான். அடிபம்பை மேலும் கீழும் அடித்தான் சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் வர ஆரம்பித்தது... வேகமாக அந்த தண்ணீரை 2 கைகளிலும் பிடித்து கொண்டு மூச்சு இறைக்க ஓடினான்.. வெண்ணிலா பக்கத்தில் சென்று அவள் முகத்தில் தெளித்தான்... மெதுவாக கண் முழித்தாள்.. சு...பா.... ஸ் அங்க யாரோ செத்து கிடந்தாங்க டா பாத்தியா.. என்று பயத்துடனும் நடுக்கத்துடனும் சொன்னாள்.. ஆமா வெண்ணிலா இத பத்தி வெளிய யார்கிட்டயும் சொல்லாத அப்புறம் போலீஸ் உண்ண விசாரிக்க கூட்டிட்டு போயிடுவாங்க.. சரி வா வீட்டுக்கு போலாம் ஏய் நீ கருங்கல் பாளையம் போலாம்னு சொன்ன.. இல்லப்பா இதை நான் போலீஸ் கிட்ட சொல்லணும் உண்ண விசாரிக்க கூட்டிட்டு போயிடுவாங்க டா அத நான் பாத்துகிறேன் பா.. நீ கிளம்பு 1st... நான் என்ன என்னமோ நினைச்சேன் என் ஆசை எல்லாம் இப்படி ஆய்டுச்சே என்று முனகி கொண்டே எழுந்தாள்... என்னப்பா முனகிகிட்டே வர எல்லாம் என் நேரம்