நீல இரத்தம் episode 14

 நீல இரத்தம் episode 14



போலீஸ் 
சுபாஷ் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் 

மெதுவாக வெண்ணிலாவை தூக்கினான் கொஞ்சம் சிரமமாக இருந்தது ஒரு வழியாக ரோட்டோரமாக கொண்டு வந்தான்.. 

அங்கே அடிபம்பு இருந்தது அதை நோக்கி சென்றான். 
அடிபம்பை மேலும் கீழும் அடித்தான் சிறிது நேரத்திற்கு பிறகு 
தண்ணீர் வர ஆரம்பித்தது...

வேகமாக அந்த தண்ணீரை 2 கைகளிலும் பிடித்து கொண்டு மூச்சு இறைக்க ஓடினான்.. 

வெண்ணிலா பக்கத்தில் சென்று அவள் முகத்தில் தெளித்தான்... 
மெதுவாக கண் முழித்தாள்.. 

சு...பா.... ஸ் அங்க யாரோ செத்து கிடந்தாங்க டா பாத்தியா.. 

என்று பயத்துடனும் நடுக்கத்துடனும் சொன்னாள்.. 

ஆமா வெண்ணிலா இத பத்தி வெளிய யார்கிட்டயும் சொல்லாத அப்புறம் போலீஸ் உண்ண விசாரிக்க கூட்டிட்டு போயிடுவாங்க.. 
சரி வா வீட்டுக்கு போலாம்

ஏய் நீ கருங்கல் பாளையம் போலாம்னு சொன்ன.. 

இல்லப்பா இதை நான் போலீஸ் கிட்ட சொல்லணும்

உண்ண விசாரிக்க கூட்டிட்டு போயிடுவாங்க டா 

அத நான் பாத்துகிறேன் பா.. நீ கிளம்பு 1st...

நான் என்ன என்னமோ நினைச்சேன் என் ஆசை எல்லாம் இப்படி ஆய்டுச்சே என்று முனகி கொண்டே எழுந்தாள்... 

என்னப்பா முனகிகிட்டே வர

எல்லாம் என் நேரம் நீ வேற

ரோட்ட பாத்து சைக்கிள் ஓட்டு... என்று கோவமா சொன்னாள்... 

நான் ஒன்னு நினைச்சேன் அது ஒன்னு நடக்குது வெண்ணிலா

எனக்கும் அப்படி தாண்டா

நீ என்ன நினைச்ச.. 

அது ஒன்னுமில்ல அத சொல்றதுக்குள்ள தான் இந்த பொணத்த பாத்து தொலைச்சுட்டேனே.. 

சரி சரி பீல் பண்ணாதஇன்னொரு நாள் வரணும்

நானும் தான

நீ எதுக்கு

டேய் அடுத்த time வரப்போ என்ன கண்டிப்பா கூப்புடற

அப்படினா எனக்கு ஒரு help

என்னடா குருவரெட்டியூர் வரைக்கும் போய்ட்டு வரணும் உன் சைக்கிள் வேணும்...

சரி போய்ட்டு வா
ஆமா எதுக்கு போற

போலீஸ்க்கு போன் பண்ண..

பார்ரா அவ்ளோகாசு இருக்கா உன்கிட்ட

100 க்கு பண்ணா free தான்... 

ஓஹோ... 

ஆமா என்று சொன்னவன் எதிரே போலீஸ் ஜீப் வருவதை பார்த்தான்..

வெண்ணிலா இறங்கி ஓரமா நில்லு போலீஸ் வண்டி வருது அவங்க கிட்ட சொல்லிடறேன் ok வா

சரிடா என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டாள்...

சுபாஷ் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஜீப்பை குறக்கட்டினான்...

ஜீப்பை நிறுத்திய போலீஸ் உள்ளே இருந்து போஸ் எட்டி பார்த்தார்

என்ன சுபாஷ் இங்க... 

உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க..

என்ன சுபாஷ்... 

அன்னைக்கு பார்த்த மாதிரியே இன்னைக்கு ஒருத்தர் செத்து கிடக்குறாங்க சார்.. 

எங்க என்று சற்று அதிர்ச்சியோடு கேட்டார்... 

விவரம் சொன்னான்... 

சார் அவன் கை விரல் 4 வெட்டி இருந்துச்சு... 

ஓஹோ.. கரெக்ட் சரியா போச்சு..

என்னாச்சு சார்.. என்று சுபாஷ் கேட்டான்...

5 விரல் வெட்டி கொலை பண்ணவன பாத்தேன்4 விரல் வெட்டுனவன் மிஸ் ஆய்ட்டானே னு யோசிச்சேன் அவன் இங்க இருக்கான
என்று போஸ் சொல்ல சுபாஷ் கேட்டான்

போஸ் நடந்தவற்றை சொல்ல 
கடைசியில் பேங்க் கொள்ளை பற்றி சொல்லி அதற்காக தான் இப்போ போய்ட்டு இருப்பதாக சொன்னார்..

பேங்க் எப்போ கொள்ளை அடிச்சாங்களாம் சார்

Night... 

எனக்கு ஒன்னு தோணுது சொல்லவா சார்

சொல்லு சுபாஷ்

கொலை பண்ணவனும் கொள்ளை அடிச்சவனும் ஒன்னு னு நினைக்கிறேன் சார்

சற்று வியந்தவர் எப்படி சொல்ற சுபாஷ்... 

ஒரு யூகம் தான் சார்....
அதே மாதிரி இன்னொன்னும் நடந்து இருக்கும் அங்க போய் நல்லா தேடி பாருங்க..
அங்க இதே மாதிரி இன்னொரு ஆள் செத்து கிடக்க வாய்ப்பு இருக்கு... 

என்று சொன்ன சுபாஷை பார்த்து அதிர்ச்சியில் நின்றார் போஸ்....

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2