நீல இரத்தம் episode 13

 நீல இரத்தம் episode 13


போலீஸ் ஸ்டேஷன் 

போன் அலறியது....

ட்ரிங் ட்ரிங்...... 

போஸ் ரிசீவரை எடுத்தார்

ஹலோ போஸ் ஹீயர்

மறுமுனையில் டாக்டர்

சொல்லுங்க டாக்டர்

இந்த ரிப்போர்ட்ம் நீங்க சொன்ன மாதிரி ஒரே மாதிரி தான் இருக்கு

இது எப்படி சாத்தியம் டாக்டர்... 

அதான் எனக்கும் தெரியல சார்
நான் research சென்டர் க்கு அனுப்பி இருக்கேன் அவங்க பாத்துட்டு சொல்லுவாங்க அதுவரைக்கும் wait பண்ணனும் 

Ok டாக்டர் thank you ஏதும் details கிடைச்சா கால் பண்ணுங்க 

Ok சார் 

போஸ் போன் வைத்ததும் போன் ரிங் ஆனது 

ஹலோ போலீஸ் ஸ்டேஷன்

மறுமுனையில் சொல்வதை கேட்டு பதட்டமானார்

எப்போ... 

ஏதும் தகவல்..

இதோ கிளம்பி வரேன்

கான்ஸ்டபிள் எல்லாரும் வாங்க பேங்க் ல யாரோ கொள்ளை அடிச்சுட்டாங்க ... 

எந்த பேங்க் சார்... 

பல்லவன் தனியார் பேங்க்...

சுபாஷ் சைக்கிள் மிதித்து கொண்டு போனான்

பின்னாடி வெண்ணிலா ஒரு வித சந்தோசம் அவளின் முகத்தில் தெரிந்தது.. 

சுபாஷ்...

என்ன வெண்ணிலா

எங்க போறோம்

கருங்கல்பாளையம்...

அது தெரியுது எதுக்கு போறோம்...

நான் தான் போறேன் நீ கூட வர அவ்ளோ தான்

என்கிட்ட சொல்ல மாட்டியா.. 

சொல்றேன் பா கொஞ்சம் பொறுமையா இரு... 

சரி சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா

என்னப்பா....

நீ ஏன் பொண்ணுங்ககிட்ட பேச மாட்டிங்கிற.. 

பேசுவேன் கொஞ்சம் கூச்சம் அவ்ளோ தான்.. 

நம்ம கிளாஸ் ல யார ரொம்ப புடிக்கும்

ஜனா

லூசு நான் பொண்ணுங்கள கேட்டேன்

அது..... 

சொல்லுடா..

அங்க பாரு எவ்ளோ பூ இருக்குனு....

ஏய் சூப்பர் டா எனக்கு இரு நான் போய் பரிச்சுட்டு வரேன்..


ஏய் வரும்போது பாத்துக்கலாம் வா

இரு வர்றேன் என்று ஓடினாள்

அங்கே போய் பூ பறித்துக்கொண்டு இருந்தாள்..

சுபாஷ் நினைத்தான்

இவள வேற கூட்டிட்டு வந்து லேட் வேற ஆகுது..

திடீரென்று வெண்ணிலா கத்தும் சத்தம் கேட்டது

சுபாஷ் வேகமாக ஓடி போய் பார்த்தான்

வெண்ணிலா மயங்கி கிடந்தாள் ...

பூச்செடியின் மறுபுறம்  மெல்ல எட்டி பார்த்தான் 

ஒரு நிமிடம் இரத்தம் உறைந்து போனவனாய் அதிர்ச்சியோடு பார்த்தான்

ஒரு பிணம் முகம் சிதைக்கப்பட்டு கையில் நான்கு விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது...

தொடரும்.........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2