நீல இரத்தம் episode 12

 நீல இரத்தம் episode 12


டி ஜி பி என்ன சந்திர போஸ் உங்க ஸ்டேஷன் ல இப்படி நடக்கும் னு நான் நினைக்கவே இல்ல

என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க... கையில் கிடைச்ச ஒருத்தனையும் கோட்ட விட்டாச்சு
அவனை போட்டோ எடுத்திங்களா இல்லையா

No சார் போட்டோக்ராபர் வரத்துக்குள்ள இப்படி ஆயிடுச்சு...

என்ன போஸ் இப்படி ஸ்கூல் பயநாட்டம் answer பன்றிங்க போங்க இந்த நியூஸ் பத்திரிகை ல வராம பாத்துகொங்க

Ok சார் and சாரி சார்... 

ரூம்மை விட்டு வெளியே வந்த போஸ்.. நெற்றி மீது கை வைத்தார்..

அப்போ தான் ஒரு யோசனை வந்தது ஓடி போய் அந்த டெட் பாடியை பார்த்தார்..

அண்ணே இங்க வாங்க
என்று கான்ஸ்டபில கூப்பிட்டார்

சொல்லுங்க சார்

நேத்து இன்னைக்கு ஏதாவது டெட் பாடி ஏதாவது பாத்ததா நியூஸ் வந்துச்சா 

ஏதும் வரல சார்..

Ok எனக்கு பக்கத்து ஸ்டேஷன் ல இதே மாதிரி கொலை கேஸ் ஏதும் வந்து இருக்கா னு கேட்டு சொல்லுங்க 

சரிங்க சார் இப்பவே போறேன் என்று அவர் சைக்கிள் நோக்கி நடந்தார்.. 

என்னாச்சு சார் என்று இன்னொரு கான்ஸ்டபிள் கேட்க

இதுவரைக்கும் மொத்தம் 3 கொலை நடந்து இருக்கு ஒவ்வொருத்தற்கும் விரல்கள் வெட்டப்பட்டு இருந்துச்சு
1,2அப்புறம் 3 னு அடுத்தடுத்து இருந்தது ஆனா இப்போ செத்தவனுக்கு 5 விரல் வெட்டி இருக்கு 4 விரல் தான் வெட்டி இருக்கணும் அப்படினா 4 வதா ஒரு ஆளை ஏற்கனவே கொன்னு இருக்கணும் இல்லையா

ஆமா சார் .. 

ஏதோ நினைத்தவர்.. சட்டென்று ஒரு பொறி தட்டியது.. 
__________________..................
சுபாஷ் கிரிக்கெட் விளையாடும் இடத்தில்..

டேய் சுபாஷ் என்னாச்சு டா காசு வாங்கிட்டியா

இல்லடா அப்பா வழக்கம் போல குடிச்சுட்டு வந்துட்டார் வீட்டில ஒரே சண்டை..

ஓ அப்படியா சரி விடு வா விளையாடலாம்...

இல்லடா நீங்க விளையாடுங்க

டேய் நம்ம டீம் ல அடிக்க ஆள் இல்ல நீ வர அவ்ளோ தான்..
சுபாஷின் பதிலை எதிர்பாக்காமல் கையில் சிறிய கற்களை எடுத்து கொண்டு 2 கையும் மேலயும் கீழையும் சுத்தி கையை குறுக்காக வைத்து கேட்டான்

இன்னொருத்தன் உற்று பார்த்து ஒரு கையை தொட்டான்

ஹே நாங்க பேட்டிங்.. என்று ஜனா சொல்லி கையை விரித்தான் 
அவன் தோட்ட கையில் 2 கல்லும் தொடாத கையில் ஒரு கல்லும் இருந்தது...

விளையாட ஆரம்பித்தனர்... 

அப்போது ஜனா சொன்னான் 

டேய் சுபாஷ் உன் ஆளு அங்க பாரு சைக்கிள் ல போறா

அதை பார்த்த சுபாஷ் வேகமாக ஓடினான்..

வெண்ணிலா என்று கத்தி கூப்பிட்டு கொண்டே ஓடினான்.. 

ஜனா ஆச்சர்யமா பார்த்தான் எப்போ சொன்னாலும் ஏதாவது சொல்லி சமாளிப்பான் இப்போ என்ன பேச ஓடுறான்..

இவனை பார்த்ததும் வெண்ணிலா சைக்கிளை நிறுத்தினாள்.
ஒரு வித சந்தோசத்தில் சுபாஷை பார்த்தாள்..

அவன் மூச்சு இறைக்க ஓடி வந்தான்

என்ன சுபாஷ் என்றாள்

மூச்சு வாங்கி கொண்டே கேட்டான்

ஒரு ஹெல்ப்

என்னடா

எனக்கு உன் சைக்கிள் வேணும்.. 2 மணி நேரத்துக்கு.. 

எதுக்கு டா எங்க போற 

கருங்கல் பாளையம் உங்க ஊர் தான்பா..

ஏய் போடா எங்க அப்பா சைக்கிள பாத்தா அவ்ளோ தான் கொன்னே போட்டுருவார்.. 

Please பா... ஒரு சின்ன வேலை அதான்.. 

சரி அப்படினா நானும் வருவேன் ok வா 

யோசித்தவன் சரி பா என்று சொன்னான்

அடுத்து என்ன நடக்க போகுது என்று தெரியாமல் கிளம்ப தயாரானார்கள்...

தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2