துப்பறியும் சுபாஷ் சந்திர போஸின் நீல இரத்தம் episode 1
எவ்வளவு problem வந்தாலும் அழட்டிக்கொள்ளாத ஒருவனின் கதை தான் இது
சுபாஷ் இவன் மேலே சொன்னது போல எதற்கும் அழட்டிக்கொள்ளதாவன் ஆனால் கொஞ்சம் புத்திசாலி இவன் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளே இக்கதை...
இவன் சிறுவயதில் இருந்து ஆரம்பிப்போம்
இவன் அவன் அம்மாவை போல அழகிய கருமை நிறம் பார்க்க கொஞ்சம் லட்சணமாகவும் இருப்பான் குழந்தையில் எந்த குழந்தையும் அழகு தான் இல்லையா சரி கதைக்கு வருவோம்...
காலை இளஞ்சூடான வெயில் தொடங்க ஆரம்பித்த நேரம்
மணி 8 இருக்கும் பல்லு விளக்கி கொண்டே காலை கடனை முடிக்க காடுபக்கமாக கிளம்பினான்
சொல்ல மறந்துட்டேன் இது 1998 இல் இருந்து நடக்கும் நிகழ்வு அதுவும் கிராமம் அதனால் டாய்லெட் வசதி எல்லாம் இங்கு இல்லை...
அவனும் அவன் நண்பன் ஜனா வும் ஒத்தயடி பாதையில் மெதுவாக நடந்து போனார்கள்..
சுபாஷ் வாரத்துல மொத நாள் ஸ்கூல் போறது நினைச்சலே கஷ்டமா இருக்கு டா
என்று ஜனா புலம்பினான்
ஆமா டா அதுலயும் இன்னைக்கு 1st பீரியட் தமிழ் டா மாரிமுத்து sir டா
கட்டுரை எழுதி வர சொன்னார் ஒரு புள்ளி வைக்கலானாலும் அடி விழும் அதான் டா பயமா இருக்கு
என்று இவன் பங்குக்கு புலம்பினான்
ஆமா நான் வேற பாதி தான் முடிச்சு இருக்கேன் எனக்கு அடி கண்டிப்பா உண்டு என்று ஜனா சொன்னான்
நான் முடிச்சுட்டேன் டா பிழை இருந்தால் மட்டும் எனக்கு அடி விழும் அவ்ளோ தான்..
என்று கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அப்பொழுது ஜனா கொஞ்சம் பயந்த குரலில் சுபாஷ் ஐ கூப்பிட்டான்
சு.....பா...ஷ்...... ஷ் அங்க பாரு டா என்று நடுங்கி கொண்டே சொன்னான்..
சுபாஷ் அதை பார்த்ததும் கொஞ்சம் பக்கென்று ஆனது...
ஓடுறதா இல்ல கத்துறதா என்று புரியாமல் நின்றான்..
கொஞ்சம் மண் திட்டு மேல 6 நீளமுள்ள பாம்பு ஒன்று படுத்து இருந்தது.. அதன் மேல்புறம் வெயிலில் பட்டு மின்னியது...
உடனே ஜனா பெரிய தடி ஒன்றை கையில் எடுத்தான்
சுபாஷ் வேறு தடி இருக்குதா என்று தேடினான் ஆனால் அவனுக்கு எதுவும் அகப்படவில்லை ..
ஜனா மெல்ல மெல்ல அந்த பாம்பை நோக்கி போனான் அதன் மீது ஓங்கி ஒரு போடு போட்டான்...
போட்டுவிட்டு சுபாஷ் ஐ பார்த்தான்
சுபாஷ் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்
ஜனா வும் சிரித்தான் ஏன் இவங்க திடீர்ன்னு சிரிகிறங்கன்னு பாத்தா ..
அது செத்த பாம்பு...
ஜனா சொன்னான்
இத பாத்த பயத்துல எனக்கு 2க்கு வராது போல னு சொன்னான் ...
அப்போது தூரத்துல ஒரு அக்கா வரத பாத்த சுபாஷ் ஜனாவை ஏரிட்டான்
டாய் நாம பயந்தது போதும் அந்த அக்காவை பயமுறுத்துவோம்..
என்று சொல்லி அந்த அக்கா வரும் பாதையில் பாம்பு நெளிந்து போவது போல அந்த செத்த பாம்பை போட்டு விட்டு கொஞ்சம் தூரத்துல இருக்குற குட்டு மறைவில் ஒளிந்து கொண்டார்கள்..... அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோடு..
அந்த அக்கா அந்த பாம்பின் அருகே கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருந்தாள் ஏதோ வாயில் முனகி கொண்டே வந்தாள்..
அவள் முன் பாம்பு இருந்ததை பார்த்து
ஐயோ........ அம்மா....... பா...ம்...பு....
என்று ஊரே கேட்கும்படி கத்தி கொண்டே ஓடினாள் கொண்டே விழுந்தடிச்சு ஓடினாள்...
ஜனா சுபாஷ் இருவரும் கொஞ்ச நேரம் சிரித்து கொண்டே இருந்தார்கள்..
கொஞ்ச நேரம் கழித்து இருவரும் காலை கடனை முடித்து கொண்டு கிளம்பும் போது அந்த அக்கா மீண்டும் திரும்பி வந்தாள்.. அவள் கூட இன்னொருதரும் வந்தார் ..
அவரை பார்த்ததும் ஜனாவுக்கு ஜர்க் ஆனது..
அது ஜனா வின் அம்மா..
டெய்ய் ஜனா நாம தான் இத பண்ணோம்னு அந்த அக்கா உங்க அம்மாகிட்ட சொல்லிட்டாங்க போல டா இணைக்கு செத்தோம் னு .. சொன்னான் சுபாஷ்..
ஜனா அம்மா திடிரென்று ஒரு குச்சியை கையில் எடுத்து கொண்டு வேகமாக வந்து கொண்டு இருந்தாள்...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பயத்தோடு நின்றார்கள்...
தொடரும்.............
--------
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry