நீல இரத்தம் epdisode 3
வெளியில் போலீஸ் நிற்பதை பார்த்த முத்துசாமி sir அது என்னவென்று விசாரிக்க கிளம்பினார் ...
மாணவர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் சிலர் முடிக்காமல் விட்ட கட்டுரையை எழுத ஆரம்பித்தனர்..
எல்லா வகுப்பு மாணவர்களும் வெளியே வருவதை பார்த்து இவர்களும் மெல்ல கொஞ்சம் கொஞ்சம் பேராக வெளியே வந்தார்கள்
அவர்கள் வரும் நேரமும் பீரியட் மணி அடிக்கவும் சரியாக இருந்தது
தூரத்தில் மாரிமுத்து sir சைகை காட்டினார் சுபாஷை பார்த்து அதை கண்டதும் வேகமா ஓடினான்
அவர் அருகே சென்றதும்..
என்னோட note book இருக்கும் எடுத்துட்டு வா என்று கூறினார்
சுபாஷ் அதை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி விரைந்தான்..
ஆனால் அவரை காணோம்...
தேடி பார்த்தான் chemistory lap ல அவரோட குரல் கேட்டது வேகமாக உள்ளே போனான் கதவின் அருகே நின்றான்
Sir உள்ள வரலாமா என்று கேட்டான் அதை கேட்டு அனைவரும் திரும்பினர்
உள்ள இருந்த இன்ஸ்பெக்டர் சந்திர போஸ் எட்டி பார்த்தார்..
மாரிமுத்து sir வாப்பா என்று சொல்லிக்கொண்டு நான் தான் வர சொன்னேன் note book எடுத்து வா னு சொல்லிக்கொண்டு இருந்தார்..
பக்கத்தில் இருந்த chemistory sir கோவிந்தராஜ் சொன்னார் sir குளோரோபார்ம் அப்புறம் இன்னும் 3 lequid திருடு போச்சு sir யார் பண்ணி இருப்பாங்க னு தெரியல னு சொன்னார்....
சந்திர போஸ் சொன்னார்
யார் மேலயாவது doubt இருந்தா சொல்லுங்க நீங்க சொல்றத வச்சு தான் கண்டு பிடிக்கணும் அப்புறம் ஸ்கூல் பசங்க எடுத்து இருப்பாங்கனு நினைக்கிறீங்களா என்று கேட்டார்
Doubt னு யார் மேலயும் தோணல sir.. 12th பசங்கள கேட்கலாம் but எல்லார்க்கும் பப்ளிக் exam நெருங்குது அதான் யோசிக்கிறேன் என்றார்
சந்திர போஸ் கேட்டார் கடைசியா யார் இங்க இருந்தாங்க யார் பூட்டு போட்டாங்க என்று கேட்டார்
அதற்கு கோவிந்தராஜ் நான் தான் sir பசங்க எல்லாரும் போன பிறகு நான் தான் பூட்டிட்டு போனேன்..
ஆனா பசங்க எடுக்க வாய்ப்பில்லை sir என்றார்
எப்படி சொல்றிங்க
பசங்களுக்கு எந்த lequid எங்க இருக்கு னு தெரியும் ஆனால் வந்தவன் தேடி தேடி பொருளை கலச்சு போட்டு இருக்கான் அதுல குளோரோபார்ம் மட்டும் 4 பாட்டில் மிஸ்ஸிங் and 1 ஓடஞ்சு இருக்கு ஜன்னல் ஓடச்சு எடுத்துட்டு போய் இருக்கான்.. என்று சொல்லி கொண்டு இருந்தார்..
அவங்க பேசுறது கேட்டுக்கொண்டு இருந்த சுபாஷ் வெளியே செல்ல முற்பட்டான்..
அவனை pt sir கூப்பிட்டார் டெய்ய்...
Sir என்று சொல்லி கொண்டு வேகமா பக்கத்தில் வந்தான் சுபாஷ்
போய் எல்லாருக்கும் டீ வாங்கிட்டு வா என்று காசு கொடுத்தார்..
சிறிது நேரத்தில் கடைக்கு போய்ட்டு வந்து எல்லார்க்கும் டீ கொடுத்துட்டு நின்றான் அப்போது பெல் அடித்தது அனைத்து மாணவர்களும் வெளியே வரும் சத்தமும் பேச்சு சத்தமும் கேட்டது
உடனே pt sir டேய் சுபாஷ் நீ போடா என்று சொன்னார் அவன் வெளியே சென்று கொண்டு இருந்தான்.
சந்திர போஸ் யோசித்து கொண்டே இருந்தார்
பசங்க எடுத்து இருக்க வாய்ப்பு இல்லை வெளிய இருந்து யாரோ வந்து இருக்காங்க இதை எங்க இருந்து ஆரம்பிச்சு எங்க முடிக்கிறது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது வெளியே சின்னபசங்க பேசும் சத்தம் கேட்டது அவர்கள் பேசுவது கேட்டதும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்..
டேய் சுபாஷ் நீ தான் ஈஸியா யார் பண்ணங்க னு கண்டு புடுச்சுடுவியே இதையும் யார் பண்ணாங்க னு கண்டுபுடுச்சு சொல்லு டா என்று அவனை சுற்றி இருந்த அவன் நண்பர்கள் சொல்லி கொண்டு இருந்தார்கள்.....
அதற்கு சுபாஷ்..
99.99% நான் கண்டு புடுச்சுட்டேன் டா ஆனால் அதை சொன்னால் எல்லாரும் நம்பனும் சின்ன பயன் சொல்றத ஏன் கேட்கணும்னு நினைப்பங்க
ஆனால் இந்த திருட்டு நடந்ததால் நம்ம ஸ்கூல் பொண்ணுங்களுக்கு ஆபத்து அதிகமா இருக்கு இதை நான் pt sir கிட்ட சொன்னேன் அவர் போலீஸ்யே கண்டுபுடிக்க முடியல நீ என்ன கண்டு புடிக்கிற கிளாஸ் க்கு போ னு சொல்லிட்டார் னு வேதனையாக சொன்னான் சுபாஷ்
சரி நீ என்ன கண்டு புடிச்ச னு சொல்லு டா என்று ஜனா கேட்டான்
இல்ல டா உங்க கிட்ட சொன்னா எனக்கு தான் problem என்று சொல்லி கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்....
இதை கேட்டு கொண்டு இருந்த சந்திர போஸ் அங்கு வந்தார்..
அவன் name என்ன சுபாஷா என்று கேட்டார்
ஆமா sir என்று கோரசாக சொன்னார்கள்
நல்லா படிப்பானா
படிப்பான் sir 2 இல்ல3 வது ரேங்க் எடுப்பான் sir. நல்லா யோசிப்பான் sir பசங்க பொருள் ஏதாவது காணாமல் போன ஈஸியா யார் எடுத்தங்க எப்படி எடுத்து இருப்பாங்க ஏன் எடுத்தாங்க எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பான் ஆனால் அவன் கண்டுபிடிக்க சொன்ன காரணம் நாம அந்த angle ல யோசிச்சு இருக்கவே மாட்டோம் ஆனால் சொன்னா கரெக்ட் ஆ இருக்கும்.. என்று ஒவ்வொருவரும் ஒரு நிகழ்வை அவனை பத்தி சொல்லி கொண்டு இருந்தார்கள்...
சரி கூட்டிட்டு வா நான் பாராட்டனும் னு தோணுது HM ரூம் ல இருக்கேன் என்று சொல்லி கொண்டு ஹ் ரூமை நோக்கி நடந்தார்..
சந்திர போஸ் செய்தி தாளை புரட்டி கொண்டு இருந்தார்
Excuseme sir may i come in என்று வெளியே சுபாஷ் கூப்பிட்டான்
வா தம்பி உன்னை பத்தி உன் friends நிறைய சொன்னாங்க அதான் உன்னை பாராட்டலாம்னு கூப்பிட்டேன் என்று கூறினார்
இல்ல sir நீங்க அதுக்கு கூப்பிடல னு நினைக்கிறேன் அதுவும் தனியா பேசனும்னு நினைச்சு இங்க வர சொல்லி இருக்கீங்க நான் என்ன நினைக்கிறேனா நாங்க பேசிட்டு இருந்ததை நீங்க கேட்டு இருப்பீங்க னு நினைக்கிறேன் so அதை பத்தி கேட்டு தெரிஞ்சுக்க என்ன கூப்பிட்டு இருக்கீங்க coreect ah sir என்று சொன்னதை கேட்ட சந்திர போஸ் ஆடி போய்ட்டார்...
அப்படியே கொஞ்ச நேரம் இறந்தவரின் மௌனத்தை சுபாஷ் கலைத்தான்
Sir........
ஆஹ்ஹ் உன் friends சொன்னது கரெக்ட் தான் நீ நல்லா யோசிக்கிற and நீ யோசிச்சது கரெக்ட் தான்
நீ என்ன கண்டு புடிச்ச னு சொல்லு அது யாரா இருந்தாலும் உனக்கு எதும் வராம நான் பாத்துக்கறேன் இதுல ஸ்கூல் பொண்ணுங்களுக்கு ஆபத்து னு வேற சொன்ன so நான் கண்டிப்பா action எடுக்கிறேன் என்றார்..
Ok sir நான் காலையில கிளாஸ் ல இருக்கும் போது என்று ஆரம்பித்தவன்..
அவன் சொல்ல சொல்ல சந்திர போஸ்ஸின் முகம் வியப்பிற்குள்ளானது கடைசியா எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும் சுபாஷ் க்கு கை கொடுத்தார்
சூப்பர் சுபாஷ் excellent இது கண்டிப்பா தப்பா இருக்க வாய்ப்பு இல்லை னு நினைக்கிறேன் இதோ இப்பவே அவனை புடிக்கிறேன் உண்மையை அவன் வாயால சொல்ல வைக்கிறேன் என்று உற்சாகத்தோடு கிளம்பினார்....
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry