நீல இரத்தம் episode 10
சந்திர போஸ் அரசு மருத்துவ மனையில் ரிப்போர்ட் பத்தி கேட்டுட்டு இருந்தார்
டாக்டர் இந்த போட்டோ ல இருக்கிற மாதிரி மச்சம் இதுக்கு முன்னாடி வந்த dead body ல இருந்துச்சு தான
ஆமா sir. இதுல இன்னொரு விசியம் 3 body லயும் ஒத்து போகுது sir..
என்னது என்று நெற்றி போட்டு விரிய கேட்டார்
3 body DNA வும் ஒரே DNA sir
Blood group கை கால் எல்லாமே கொஞ்சம் கூட மாறல sir...
அது எப்படி முடியும்..... என்று குலப்பத்தோடு கேட்டார்..
அதான் எங்களுக்கும் புரியல sir..
Research பண்ணிட்டு இருக்கோம்
செத்தவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல செத்து இருக்காங்க
இவங்கள பத்தி எந்த டீடெயில்ஸ் ம் தெரியல
செத்தவங்களை பத்தியும் தெரியல கொலை பண்ணவன பத்தியும் தெரியல
காணாமல் போனவங்க complaint செக் பண்ணி பாத்தா இந்த அடையாளத்தொட யாரும் complaint குடுக்கலை...
அடுத்த ஸ்டெப் எப்படி வைக்கிறது னு ஒண்ணுமே புரியல....
என்று புலம்பி கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர்...
ஏன் டாக்டர் எனக்கொரு சந்தேகம்.
என்ன சொல்லுங்க
இரட்டை பிறவியாக இருந்தால் DNA ஒண்ணா இருக்குமா
லட்சத்துல ஒருத்தருக்கு இருக்கும் sir ஆனால் இங்க பாத்திங்கனா 3 பேர் இருக்காங்க மச்சம் கூட மாறாமல் இருக்காங்க..
அதான் டாக்டர் எனக்கும் புரியல..
அதற்குள் டி ஜி பி அங்கே வந்தார்
என்ன போஸ் கேஸ் எந்த கண்டிஷன் ல இருக்கு என்று கேட்க
நடந்தவற்றை ஒண்ணுவிடாமல் சொல்ல
டி ஜி பி நெற்றியை தேய்த்து கொண்டே சொன்னார்
என்ன பண்ணலாம் போஸ்..
பொறுத்து இருந்து தான் sir பாக்கணும்... என்று சொன்ன போஸ் திடிரென்று வெளியே ஓடினார்...
என்னாச்சு போஸ்...
இதே மாதிரி மச்சம் அங்க நடந்து போற ஆள் கால் ல இருக்கு பாருங்க என்று ஓடிக்கொண்டே சொன்னார்
டேய்..... என்று வேகமாக கத்தி கொண்டே ஓடினார்.. அவன் திரும்பி பாத்தவன் ஓட முற்பட்டான்..
அதற்குள் அவன் அருகே போஸ் சென்று சென்று அவன் காலரை இழுத்து பிடித்தார்...
சுபாஷ் அந்த குகைக்குள் சென்றான்
நேராக அந்த திசை காட்டும் குறியை நோக்கி சென்றான்..
அதில் இருக்கு. 4 திசை காட்டும் கொடும் அதில் காட்டி இருப்பது போன்று திருக ஆரம்பித்தான்...
2 மணி நேர போராட்டத்திற்கு பின் அதை சரியாக பொறுத்தினான்.
அதை பொறுத்தியவுடன் 4 புறமும் அந்த cube திறந்தது....
உள்ளே ரப்பர் மாதிரி இருந்தது.
அதை பிரிந்தான் அது பேப்பர் போன்று இருந்தது அதை பார்த்தான் அது ஒரு மேப்... அதில் v shape ல இரண்டு மலைகள் அதன் நடுவே கோடு போட்டது போல ஒரு மலையும் இருந்தது..
அதில் சிவப்பு நிற கோடுகள் நான்கைந்து புள்ளிகளில் இணைத்து இருந்தது.. ஆனால் எந்த பெயரும் குறிப்பும் அதில் இல்லை..
என்ன இது ஒரே புதிராவே இருக்கு.. இந்த இடம் எங்க இருக்கு னு தெரியலையே என்று யோசித்து கொண்டு குகையை விட்டு வெளியே வந்தான்..
வெளியே வந்த சுபாஷின் முகத்தில் சந்தோசம் பீறிட்டது..
சூப்பர் என்று கத்தி கொண்டே வேகமாக மலையை விட்டு இறங்க தொடங்கினான்
தொடரும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry