நீல இரத்தம் episode 11
நீல இரத்தம் episode 11
சந்திர போஸ் அவனை ஸ்டேஷணக்கு இழுத்துட்டு போனார்..
உன் பேர் என்னடா என்று அதட்டினார்...
அவன் பேசாமல் இருந்தான்
அவனை பிடித்து உலுக்கி கொண்டே கேட்டார்
உன்ன தாண்டா உன் பேர் என்ன எந்த ஊர்.....
அவன் ஒரே திசையில் பார்த்து கொண்டு இருந்தான்...
ஓங்கி ஒரு அரை விட்டார் பளார் என்று
அவன் எதற்கும் அசரவில்லை..
ரொம்ப நேர போராட்டத்திற்கு பிறகு சோர்வாக அந்த அறையை விட்டு வெளியே வந்தார்...
ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு சென்று..
அண்ணே ஒரு டீ..
என்ன சார் வேர்த்து போய் இருக்கீங்க... என்னாச்சு என்று டீ கடைக்காரர் விசாரித்தார்..
அத ஏன் கேட்கறீங்க ஒரு அக்கியூஸ்ட் சவர அளவுக்கு அடிச்சு
பாத்தச்சு வாயே தோரக்கலா
அப்படியா என்ன அவன் மனுசனா இல்ல மிருகமா...
என்று சொன்னவர் அவசரமாக
சார் உங்க ஸ்டேஷன் ல இருந்து யாரோ ஓடுறான்..
அதை பார்த்த இன்ஸ்பெக்டர்
அது சிறையில் இருந்த அந்த கைதி..
வேகமாக துரத்தி கொண்டு ஓடினார் அவர் ஓடுவதை பார்த்த மத்த போலீஸ் எல்லாம் சேர்ந்து துரத்த ஆரம்பித்தனர்..
அவன் சந்து சந்தான பாதையில் அங்கேயும் இங்கேயும் ஓடினான்..
விடாமல் துரத்திய போலீசார்
ஒரு இடத்தில் அவனை தவற விட்டனர்.....
மூச்சு இறைக்க ஒவ்வொரு போலீஸாக வந்து சேர்ந்தனர்...
அதை பார்த்த போஸ் எல்லாருமே வந்துட்டீங்க எப்படி அவனை ஸ்டேஷன் ல இருந்து தப்பிக்க விட்டீங்க...
அதிர்ச்சியுடன் பார்த்த அவர்கள் சார் அவன் போலீஸ் ஸ்டேஷன் ல இருந்து தப்பிக்கல சார் நீங்க தோரத்துரத பாத்து நாங்களும் வந்தோம் என்று சொன்னனர்..
ஏதோ தப்பாக தோன்றவே வேகமாக ஸ்டேஷன் க்கு ஓடினார்
உள்ளே சென்று பார்த்தவர்க்கு அதிர்ச்சி
அந்த நபர் முகம் சிதைக்க பட்ட நிலையில் கையில் 5 விரல்கள் வெட்டப்பட்டு கிடந்தார்...
பின்னாடியே வந்த போலீஸ் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்
இவனை தானே இப்போ தோரத்தினோம்.......
சுபாஷ் வீடு
ஜனா இங்க வாடா
என்னடா
நாம கருங்கல் பாளையம் வரைக்கும் போலாமா டா
எதுக்கு டா
சும்மா தான் டா சைக்கிள் இருக்கா
இல்லடா அப்பா எடுத்துட்டு போய்ட்டார்
வாடகை சைக்கிள் கிடைக்குமா
இருக்கும் டா ஆனா காசு வேணுமே
1 மணி நேரத்துக்கு 1 ரூபாய் டா
என்று ஜனா சொன்னான்
ஹ்ம்ம் சரி டா நான் எங்க அப்பா கிட்ட கேட்டு பாக்றேன்
வீட்டில் அப்பாவை தேடினான்..
அவன் அம்மா விறகு அடுப்பில் சோறு வடித்து கொண்டு இருந்தாள்
அம்மா அப்பா எங்கமா
ஏன்டா
எனக்கு காசு 1 ரூபாய் வேணும்
எதுக்கு டா
வாடகை சைக்கிள் ஓட்ட
கேட்டு கொண்டு இருக்கும் போது அவன் அப்பா குடிபோதையில் வந்து கொண்டு இருந்தார்
இவனுக்கு பக்கென்று ஆனது...
இன்னைக்கு போன மாதிரி தான் என்று நினைத்து அடுத்து வரும் சண்டையை எதிர்நோக்கி பயத்துடன் அவன் அப்பாவை பார்த்தான்...
தொடரும்......
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry