நீல இரத்தம் episode 7

 சுபாஷும் அவன் நண்பர்களும் மலையோரமாக தேன் எடுக்க சென்று கொண்டு இருந்தார்கள்


டேய் மலைல பாறை இடுக்குல அடுக்கு தேன் இருக்கும் டா மேல போலாம் என்றான் 

சரி வாங்கடா போலாம் என்று எல்லோரும் மலை மீது ஏறிக்கொண்டு இருந்தனர்

ஜனா அவசர அவசரமாக கூப்பிட்டான்

டேய் அங்க தான் டா தேன் பூச்சி போய்ட்டு போய்ட்டு வருது அங்க கண்டிப்பா இருக்கும் வாங்கடா என்று சொல்லிட்டு உள்ளே முள் புதர்க்குள்ள போனான் சுபாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளே சென்றார்கள்.. பாறையின் நடுவே ஒரு ஆள் செல்ல கூடிய அளவிற்கு குகை போன்று இருந்தது..

உள்ளே ஒவ்வொருவராக சென்றனர்.. 

உள்ளே நிறைய தேன் கூடுகள் இருந்தன. 

நமக்கு இணைக்கு செம்ம வேட்டை டா ரொம்ப அலையுனும்னு நினைச்சேன் பரவால்ல டா 
என்று ஜனா சொன்னான் 
வந்த எல்லாரும் ஆமா டா 

சரி ஆளுக்கு ஒன்னு எடுப்போம் போய் வேப்பிலை இல்லனா துளசி தலையை பரிச்சுட்டு வாங்க டா என்று இன்னொருவன் சொல்ல வேகமா ஒவ்வொருவரும் தேட ஆரம்பித்தனர்.. 

சுபாஷ் அந்த சின்ன குகையை சுற்றி பாத்து கொண்டு இருந்தான். 

சின்ன சின்ன பாறையை தொட்டு பார்த்து கொண்டு வந்தான்

ஒரு இடத்தில் வந்ததும் நின்றான். திசை காட்டி போல வட்டமாக ஒரு கல் மேலே தொங்கி கொண்டு இருந்தது அதை புடித்து இழுத்து பார்த்தான் வரவில்லை 

அதை திருகினான்  முடியவில்லை
Reverse ல திருப்பினான் சுற்ற ஆரம்பித்தது ஆனால் அது கழண்டு வர மாதிரி தெரியவில்லை.. 

கொஞ்சம் டென்ஷன் ஆனவன் வேற பக்கம்  சுற்றி பார்க்க ஆரம்பித்தான்.. 

அதற்குள் அவன் நண்பர்கள் தேனை எடுக்க ஆரம்பித்து இருந்தனர். 

ஜனா ஒரு பெரிய தேன் கூட்டை அப்படியே எடுத்தான் 

சுபாஷ் இங்க பாருடா நிறய தேன் இருக்கு என்றான். 

அதை எடுத்து தாங்கள் கொண்டு வந்த பக்கெட் ல் போட்டான் 

சுபாஷ் தேனை தன் ஆட்காட்டி விரலால் தொட்டு தலையை மேலே தூக்கி நாக்கில் வைத்து சப்பினான்.. 

அப்போது தான் அதை கவனித்தான். 

ஜனா எடுத்த தேன் கூட்டிற்கு அருகே ஒரு ஓட்டையும். அதில் சூரிய ஒளி வருவதையும் கவனித்தான். அந்த ஒளி நேராக அந்த திசை காட்டி இருக்கும் இடத்தில் அதன் மேல் அடித்தது.. 

சுபாஷ் சற்று உற்சாகத்துடன் டேய் இப்போ நாம இருக்கிறது east ல தான 

East ah அப்படினா என்று கேட்டான் ஜனா.

போடா என்று சொல்லிவிட்டு அந்த திசை காட்டியை E என்று எழுத்து இருக்கும் இடத்தை அந்த ஒளி படும் இடத்தில் திருப்பி வைத்தான். எதுவும் நடக்க வில்லை ஒவ்வொரு எழுத்தாக வைத்து பார்த்தான் எதுவும் நடக்க வில்லை

என்னதாண்டா பண்ற என்று ஜனா கேட்டான். 

கோபத்தில் வேகமாக அதை சுத்திட்டு தலையை குனிந்து நின்றான். அந்த ஒளி N ற்கும் E ற்கும் நடுவில் நின்றது.. 

போலாம் டா என்று சுபாஷ் சொல்லும்போது ஏதோ திறக்கும் சத்தம்கேட்டது அனைவரும் திரும்பி பார்த்தனர். ஒரு பெட்டி size ல் கதவு போல திறந்து இருந்தது. 

சுபாஷ் அதன் அருகில் சென்று பார்த்தான். கூடவே அவன் நண்பர்களும் அங்க இருந்ததை பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.....

மர்மம் தொடரும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

Thank you if any mistakes sorry

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2