நீல இரத்தம் episode 9

 சுபாஷ் வீடு


ஜனா கேட்டான்

என்னடா இது

இது cube டா ஆனா அது டிபரெண்ட் கலர் ல இருக்கும் ஆனா இது எல்லாம் ஒரே கலர் ல இருக்கு அதான் என்ன பண்றது னு தெரியல but அங்க அங்க கோடு கோடா இருக்கு. என்னனு ஒன்னும் புரியல டா என்றான்

நான் கூட புதையல் இருக்கும்னு நினைச்சேன் டா

சரி வரியா லைப்ரரி வரைக்கும் போலாம் என்றான் சுபாஷ்

போடா நான் வரல புக் பாத்தாலே எனக்கு ஆகாது. என்றான் ஜனா

லைப்ரரி

அண்ணா... என்றான் சுபாஷ்

வா சுபாஷ் என்று சொன்னவர் 35 வயதுக்கு உண்டான தேகம் இடது கை இல்லை வலது கையில் ஏதோ எழுதி கொண்டு இருந்ததற்கான அடையாளமாக பேனா இருந்தது...

அண்ணா எனக்கு ஒரு help 

சொல்லு சுபாஷ் என்ன புக் னு சொல்லு நான் எடுத்து தரேன் என்றார்

அண்ணா cube தெரியுமா 

Cube ஆஹ் கலர் காலரா இருக்குமே அதுவா

ஆமா அண்ணா அத எப்படி solve பண்றது னு தெரியணும் அதான் கேட்டு போலாம்னு வந்தேன் அண்ணா

ஓ அப்படியா ஆனா அதை பத்தி எனக்கு தெரியாதே புக் கூட அதை பத்தி இல்லையே.

அப்படியா அண்ணா சரினா ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க

என்று சொல்லிட்டு கிளம்பினான்

இரவு

சுபாஷ் அந்த cube சுத்தி சுத்தி திருகி திருகி பாத்தான் ஆனா எண்ணனே அவனுக்கு புரியல
டார்க் பிரவுன் கலர் ல இருந்தது..

அதில் இருந்த கோட்டை மட்டும் ஒன்னு சேர்க்க என்ன என்னமோ பண்ணி பார்த்தான் ஒன்னும் பண்ண முடியல.. ஒரு கட்டத்தில் தூங்கி போனான்..

கனவில்
மலைக்கு போனது தேன் எடுத்தது
என அங்கு போனது எல்லாம் கனவாக வந்தது அதில் ஒரு மிருகம் அவனை கடிக்க வருவது போன்றும் துரத்துவது போன்றும் வந்தது..
அதில் மனித உடம்பும் மிருக தலையும் கொண்ட ஒன்று இவன் கழுத்தை கடிக்க பாய்ந்தது.. 

திடுக்கிட்டு எழுந்தான் சுபாஷ்.. 

எப்பா என்னா ஒரு கனவு.. 

என்று தலையை பிடித்து உட்கார்ந்தான்.. 
எழுந்து சென்று தண்ணியை சொம்பில் எடுத்து குடிக்க ஆரம்பித்தான். 

சட்டென்று ஏதோ அவனுக்கு தோன்றியது. உற்சாகமானான்.

எப்போ விடியும் என்று தூங்காமல் விழித்து கொண்டு இருந்தான்

விடியல் காலை 5 மணி வேகமாக மலையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்...

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2