நீல இரத்தம் episode 17

 


நீல இரத்தம் episode 17

வாசல் கதவை நோக்கி இவர்கள் செல்ல செல்ல எதிரே பண்ணையார் எதிரே வந்து கொண்டு இருந்தார்...

அவரை பார்த்ததும் போஸ்க்கு போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்த அந்த நபர் மற்றும் துரத்திய நபர் நியாபகம் வந்தது இவரும் அவர்களை போலவே இருந்தார்.. 

ஆச்சர்யமாக பார்த்தவர் அவர் காலில் மச்சத்தை தேடினார்.. வெட்டி கட்டி இருந்ததால் தெரியவில்லை...

வெளியே வந்தவர் வாங்க இன்ஸ்பெக்டர் உங்களுக்கு என்ன வேண்டும்.. என்ன திடீர்னு இந்த பக்கம் என்று கேட்டார் 

ஒரு கேஸ் விசயமா வந்தோம் ஆமா உங்க பெயர் என்ன..?  என்று கேட்டார்

வேலு கவுண்டர் ஏன் கேட்கறீங்க

உங்களை விசாரிககணும்

எதுக்கு?? 
என்று குழப்பத்துடன் கேட்டார்..

இதுவரைக்கும் 5 ,,, 6 கொலைகள் நடந்து இருக்கு அது நீங்களா இருக்குமோ னு சந்தேகம்.. 

சந்தேகத்தில் எப்படி என்னை அர்ரெஸ்ட் பண்ணுவிங்க ஆதாரம் என்ன இருக்கு.. 

நிறைய இருக்கு 
இது உங்க DNA sample அது செத்தவங்க DNA 2உம் ஒரே மாதிரி இருக்கு 
அதுமில்லாம இறந்தவங்க காலுல இருக்கிற மச்சம் உங்க காலுல இருக்கிற மச்சம் ஒரே மாதிரி இருக்கு.. இதே மாதிரி நிறைய ஆதாரம் இருக்கு ஏன் கொலை செஞ்சிங்க எப்படி பண்ணிங்க னு நீங்க தான் சொல்லணும்... 

என்னோட DNA னு எப்படி சொல்றிங்க

அது உங்க தலை முடியில் இருந்து எடுத்து

அது எப்படி உங்களுக்கு கிடைச்சது 

அத நாங்க சொல்ல முடியாது உங்களுக்கு தெரியாமலே எடுத்தது (சுபாஷ் குடுத்த முடி அது)

சார் நான் கொலை பண்ணல 

அத ஸ்டேஷன் ல வந்து சொல்லுங்க வாங்க போலாம் என்று சொல்லி கொண்டே கைக்கு விலங்கு போட்டார்...  

ஜீப்பில் ஏறி கிளம்பினர்

நடப்பதை எல்லாம் ஒரு உருவம் பார்த்து கொண்டு இருந்தது.. 

அந்த உருவத்தின் குரல் மட்டும் கேட்டது..

இந்த போலீஸ்க்கு இன்னொரு சவால் கொடுக்கணும் இந்த வேலு கவுண்டர் செத்ததும்.. அடுத்து யார் சாக போரங்கன்னு இந்த போலீஸ் பார்க்கும்
குழம்பி போய் நிற்கும் நான் மட்டும் வெற்றி பெற்று கொண்டே இருப்பேன் என்று கத்தியது அந்த குரல்... 

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2