நீல இரத்தம் episode 18

 நீல இரத்தம் episode 18


போலீஸ் ஸ்டேஷன்

ஒரு அறையில் வேலு கவுண்டரை சேரில் உட்கார வைத்து இருந்தனர்

போஸ் பேச ஆரம்பித்தார்

சொல்லுங்க ஏன் இந்த கொலைகளை பண்ணிங்க 

நான் பண்ணல நீங்க கொலை பண்ணவன விசாரிச்சா பரவாயில்ல நினைக்கிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் ஓங்கி ஒரு அரை விட்டார் போஸ்.

எதிர்பாக்காத அந்த அரையில் நிலைகுலைந்து போனார்.. 

போஸ் ஒரு டைரி எடுத்து காட்டினார்..

இது என்னனு தெரியுதா...

மங்கலாக தெரிந்த அந்த டைரி பார்த்து ஹ்ம்ம் என்று சொன்னார்..

இது உன்னோடது தான

ஆமா....... 

இதுல என்ன எழுதி வச்சு இருக்க னு தெரியுதா

இப்போ நடந்த கொலைகள் எல்லாம் நீ இதுல எழுதின மாதிரி நடந்து இருக்கு அதுக்கு என்ன சொல்ற

ஒரு நிமிடம் யோசித்தவன் மயக்கம் போட்டு விழுந்தான்.... 

அவன் கன்னத்தை தட்டி தட்டி பார்த்த போஸ்.. 
தண்ணி கொண்டு வாங்க என்றார்

தண்ணீரை முகத்தில் அடித்தார் ஆனால் அவன் எழுந்தரிக்கவில்லை.. 

உடனே வண்டியை எடு ஹாஸ்பிடல் போலாம் என்று கான்ஸ்டபிள் பார்த்து சொன்னார்

அவனை தூக்கி கொண்டு ஜீப்பில் ஏற்றினர்.. 

போஸ் முன்னாடி போனதும் 

சார் கார் சாவி விட்டுட்டு வந்துட்டேன் இருங்க எடுத்திட்டு வரேன் என்று உள்ளே போனார்

போஸ் தனக்குள் பேசிக்கொண்டார் ஒரு வழியா இந்த கேஸ் முடிய போகுது.. 

எதேச்சையாக காரை பார்த்தார் வேலுவை காணவில்லை. 

ரோட்டில் ஓடி கொண்டு இருந்தான்..

அவனை துரத்தி கொண்டு இவரும் ஓடினார்.. 

சந்து போந்து என மாறி மாறி ஓடிக்கொண்டு இருந்தனர்... 

ஒருகட்டத்தில் ஓடுவதை நிறுத்தினார் போஸ்.. 

ஒரு மதில் மீது எட்டி பார்த்தார்

அங்கு வேலு கவுண்டர் கால் தடுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்து கிடந்தார்.... 

போஸ் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்...

சுபாஷ் பள்ளி கூடத்தில்

டேய் சுபாஷ் நம்ம கிளாஸ் ல படிக்கிற வசுமதி அவங்க அப்பா ரொம்ப முடியாம இருக்காராம் நம்ம friends லாம் போய் பாத்துட்டு வரலாம்னு சொல்றாங்க டா போலாமா

Hmm ok டா யார் யார் வராங்க 

நான் நீ தீபன் பிரபாகரன் சித்ரா வெங்கடேஸ்வரி நித்யா அப்பறம் உன் ஆளு வெண்ணிலா

பொண்ணுகளுமா டா 

டேய் அவங்க கூப்பிட்டு தாண்டா போறோம் அவங்களுக்கு தனியா போக பயமாம் வர சொன்னாங்க

ஓஹ் அப்படியா ஆமா அவங்க மலக்காரங்க மலைக்கு தான் போகனுமா

ஆமா டா

சரி டா போலாம்.. 

இவர்கள் பேசுவதை கேட்ட வெண்ணிலா சந்தோஷ பட்டாள்..

சுபாஷ் முகம் மட்டும் ஏதோ யோசனையில் மூழ்கியது..

நான் கனவுல பார்த்த மாதிரி அந்த மலைல நடந்துருமோ.. 
அப்படி நடக்கிற மாதிரி இருந்தா அந்த கொலையை எப்படியாவது தடுக்கணும் என்று நினைத்து கொண்டான்

அவன் கனவில் செத்தவங்க யார இருக்கும்.. 

பொறுத்து இருந்து பார்ப்போம் அடுத்த எபிசோடில்

தொடரும்ம்ம்....... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2