நீல இரத்தம் episode 19

 நீல இரத்தம் episode 19


Case closed 


என்ற பைலை  கட்டி முடித்து விட்டு அப்பாடா இந்த கேஸ் முடிஞ்சது என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் போஸ்

ஆனால் அவருக்கு மனதில் ஒரு குழப்பம்
செத்தவங்க ஒரே மாதிரி இருந்தது எப்படி
எல்லாருடய DNA வும் ஒரே மாதிரி எப்படி இருந்தது
எப்படி பண்ணினார்
நீல இரத்தம் எப்படி வந்தது
எல்லாத்தையும் பண்ணவர் கடைசி வரை ஒத்துக்கொள்ளாதது ஏன்
அந்த சின்ன கால் தடம் யாரோடது
பேங்க் ல கொள்ளை அடித்தது இவரா 
இவராக இருந்தால் அந்த பணம் எங்கே
கொலைக்கான காரணம் என்ன 
என்று இவருள் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது
சரி இப்போதைக்கு இந்த கேஸ் முடிஞ்சதா சொல்லுவோம்
யாருக்கும் சொல்லாமல் இந்த கேஸ் பத்தி விசாரிபபோம் என்று எண்ணி கொண்டார்... 

சார் என்று கான்ஸ்டபிள் கூப்பிட என்ன என்று கேட்பது போல் பார்த்தார்

கமிஷனர் ஆஃபீஸ் ல இருந்து கால்

என்ன சொன்னாங்க

உங்களை வர சொன்னாங்க சார்

சரி நான் போய்ட்டு வந்துடறேன் ஸ்டேஷன் பாத்துகொங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்...

அவர் ஜீப்பை எடுத்து கொண்டு சென்றதும் 

ஒரு கை போனில் நம்பரை டயல் செய்தது

கரகரப்பு குரலில்

என்னாச்சு என்று எதிர் முனையில் கேட்டது

கேஸ் complete னு முடிச்சுட்டாங்க.. சார்

ம்ம்ம் கொஞ்சம் கூட திறமை இல்லாதவனா இருப்பான் போல... எனக்கு டஃப் கொடுப்பான் என்று பார்த்தால் இவன் சரி பட்டு வரமாட்டான் 
ஆனால் ஒரு சிறுவன் என்னை நெருங்கி கொண்டு இருக்கிறான்.. 
என் எல்லைக்கு அருகில் வந்து விட்டு சென்று விட்டான் அவனை திசை திருப்ப ஒரு கொலை செய்ய வேண்டியதா போச்சு

யாரு சார் போட்டுடலாமா

டேய் fool அவன் தான் எனக்கு சரியான ஆள் புத்திசாலி.. கொஞ்ச நாள் அவனுக்கு வேலை கொடுக்கிறேன் அவன் மூலமாக இந்த போலீஸ் வருவான்..

நீங்க செஞ்சா சரியாக தான் இருக்கும்

சரி அந்த பையன் இன்னைக்கு மலைக்கு போறதா தெரியுது 
நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன். வேறு விதமாக இவனாவது இதுவரைக்கும் பண்ணிய கொலை இப்போது பண்ணும் கொலை எல்லாம் பண்ணுவது ஒரே ஆள் என்று கண்டு பிடிக்கிறானா என்று பார்ப்போம்...
என்று சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தனர்..

சுபாஷ் மலைக்கு செல்ல ஆயத்தம் ஆன போது அவன் வளர்த்து வந்த கிளி அவன் தோளில் அமர்ந்தது

ஏய் இங்க என்ன பண்ற நான் மலைக்கு போறேன் நீ இங்கேயே இரு

இல்ல ஜோஸ்.. நானும் வருவேன் என்று கீச் குரலில் கத்தியது..

ஏய் ஜூலி என் பெயர் சுபாஷ்

ஜோஸ்.. என்று சொன்னது ஜூலி

சு...

சு...

பா...

பா...

ஸ்...

ஸ்....

சுபாஷ்


ஜோஸ்... என்று மறுபடியும் சொன்னது

உண்ண திருத்த முடியாது... 
சரி வா போலாம் அங்க வந்து சமத்து பையனா இருக்கணும் ok வா

Ok என்று சொல்லும்போது ஜனா உள்ளே வந்தான்

ஜூலி என்ன பண்ற என்றான்

ஜன்னி... என்று கீச்சிட்டது

என்னடா என்ன ஜன்னி னு சொல்லுது

போடா என்னையவே ஜோஸ் னு தான் சொல்லுது 

போலாமா

ம்ம்ம்...

கிளம்பினார்கள்..

அடிவாரத்தில் வெண்ணிலா மற்றும் சிலர் வந்து இருந்தனர்

சுபாஷ் வந்தான் வெண்ணிலா கேட்டாள்

உங்க வீட்டுக்கு வறோம்னு சொன்னேன் நீ வேண்டாம்னு சொல்லிட்டியாம் ஏன் டா

இல்லப்பா எங்க வீடு குடிசை அவ்வளவு வசதி இல்லை அதான்

நாம friends டா இதலாம் பாக்க கூடாது return வரும்போது வறோம்

இல்லப்பா வேணாம்

வறோம் அவ்ளோ தான்

ம்ம்ம்
என்று சொல்லும் போது ஜூலி பறந்து வந்து அவன் தொழில் அமர்ந்தது

ஏய்ய்ய் கிளி என்று பெண்கள் அனைவரும் கத்தினர்

கிளி கேட்டது இது யாரு
வெண்ணி

வெண்ணியா

வெண்ணிலாவை கேட்குது என்று ஜனா சொல்ல
சுபாஸ் தடுக்க பார்க்க முடியவில்லை

நான்தான் என்று வெண்ணிலா சொல்ல அவள் தோளில் போய் அமர்ந்தது.. 

இதை எல்லாம் இரு கண்கள் ஒளிந்து இருந்து பார்த்து கொண்டு இருந்தது

தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2