நீல இரத்தம் episode 20
நீல இரத்தம் episode 20
சுபாஷ் மற்றும் அவன் நண்பர்கள் மலை ஏற தொடங்கினர்
பொண்ணுங்க மலையில் பாறை மீதும் கல் மீதும் ஏற சிரமப்பட்டனர்
ஜனா சித்ரா கையை பிடித்து கொண்டு நடந்தான்
வெங்கடேஸ்வரி தீபன் கையை பிடித்துக்கொண்டாள்
இப்படியாக ஆளுக்கொரு கையை பிடித்து கொள்ள
வெண்ணிலா மற்றும் சுபாஷ் மட்டும் இருந்தார்கள்
ஜனா சொன்னான் மச்சி enjoy
சுபாஷ் எதிர்பாக்காத நேரத்தில் வெண்ணிலா சுபாஷ் கையை பிடித்தாள்
டேய் என்னால தனியா நடக்க முடியல என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்
சுபாஷ் நெஞ்சு கொஞ்சம் பட படவென்று அடித்துக்கொண்டது..
நடக்கும் போது ஏதோதோ பேசிக்கொண்டு நடந்தனர்..
அப்போது ஜனா சொன்னான் சுபாஷ் மினி ஊத்துகிட்ட வந்துட்டோம் டா தண்ணீர் போகும் சத்தம் கேட்குது பாரு என்றான்..
வெண்ணிலா கேட்டாள் சுபாஷ் அத பாக்கலாம் டா please என்றாள்
நடைபாதையின் ஓரத்தில் எட்டி பார்த்தனர்....
அப்பொழுது சுபாஷ் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தான் ஒரு செடியில் மாட்டி தொங்கியவன் பின் அது அறுந்து வில பள்ளத்தாக்கில் விழுந்தான்..
அனைவரும் ஒரே கோரசாக சுபாஷ் என்று பதறி போய் கத்தினர்
வெண்ணிலா மயக்கம் போட்டாள் கிளி வேகமாக பறந்து பள்ளத்தாக்கில் போனது...
சிறிது நேரத்திற்கு பிறகு கிளி மேலே வந்தது
ஜோஸ் முள்ளு செடில மாட்டிட்டு இருக்கு அபாயம் என்று சுபாஷ் சொல்லி கொடுத்த சில வார்த்தைகளை சொன்னது
ஜனா வேகமாக இருங்க நான் அவனை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மண் பாதையில் சறுக்கி கொண்டு கீழே இறங்கினான்
நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர்
வெண்ணிலா மயக்கம் தெளிந்து எழுந்து நின்றாள்
அருகில் சுபாஷ் நின்று கொண்டு இருந்தான்...
அவனை பார்த்ததும் கட்டி பிடித்து கொண்டாள்..
கோரசாக எல்லோரும் ஹே என்று கத்தினர்
வெண்ணிலா வெட்கப்பட்டு முகத்தை மூடி கொண்டாள்...
மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்
அப்போது ஜனா சொன்னான் மச்சி நான் night கனவு கண்டேன் டா நீ இதே மாதிரி பள்ளதாக்குல விலுற மாதிரி இண்டு முல்லுல மாடிக்கிட்டு இருக்குற மாதிரி என்று சொல்ல
முன்னே சென்று கொண்டு இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர்..
ஜனா கேட்டான் என்னாச்சு எல்லாரும் ஒண்ணா திரும்பி பாக்கிறீங்க அது எதேட்சையா நடந்தது என்று சொன்னான்..
இல்லடா நானும் இதே மாதிரி கனவு கண்டேன் னு எல்லோரும் ஒரே நேரத்தில் கோரசாக சொல்ல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்....
இப்போது சுபாஷ் கொஞ்சம் ஆடி போனான்...
வெண்ணிலா சொன்னாள் எனக்கு அந்த மாதிரி கனவு வரல
யாரோ ஒருத்தர கொன்னு மரத்தில் கட்டி தொங்க போட்டு இருந்தாங்க என்று சொல்ல சுபாஷ் மேலும் ஆடி போனான் ஏனென்றால் அவன் கனவிலும் அதுவே வந்தது...
கொஞ்சம் சுதாரித்து கொண்டு அதலாம் ஒன்னுமில்ல சும்மாடா வாங்க போலாம் என்று சொல்ல எல்லோரும் இல்ல நாம திரும்பி போயிடலாம் என்று சொன்னனர்.
அட லூசுங்களா அந்த டர்ன் திரும்புனா அவங்க வீடு இவ்ளோ தூரம் வந்துட்டு திரும்பி போறதா என்று சுபாஷ் கேட்டான்
அப்படியா அப்படினா ok என்று செல்ல ஆரம்பித்தனர்
சுபாஷுக்கு கனவில் கண்ட அந்த தலையில்லாத முண்டம் மரத்தில் தொங்குவது கண் முன் வந்து போனது.....
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry