இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளின் ஸ்பரிசம்

 உருட்டும் விழிகளால் உருகியது என் இதயம் உன் சுவாச காற்று என்னை கடந்து போன போனால் கூட என் சுவாச காற்றும் சேர்ந்தே பயணிக்கிறது கனவில் கூட உன்னை நெருங்கும் போது என்னவோ தெரியவில்லை என் இதயம் வேகமாக துடிக்கிறது... கண் சிமிட்டும் நொடியில் கூட  நான் உன்னை மறப்பதில்லை...  நொடியின் மடியில் என் விடியல் என்றும் உன்னோடு... ___________ குருவை சக்தி

நீல இரத்தம் episode 11

 நீல இரத்தம் episode 11 சந்திர போஸ் அவனை ஸ்டேஷணக்கு இழுத்துட்டு போனார்..  உன் பேர் என்னடா என்று அதட்டினார்... அவன் பேசாமல் இருந்தான் அவனை பிடித்து உலுக்கி கொண்டே கேட்டார்  உன்ன தாண்டா உன் பேர் என்ன எந்த ஊர்..... அவன் ஒரே திசையில் பார்த்து கொண்டு இருந்தான்...   ஓங்கி ஒரு அரை விட்டார் பளார் என்று  அவன் எதற்கும் அசரவில்லை..  ரொம்ப நேர போராட்டத்திற்கு பிறகு சோர்வாக அந்த அறையை விட்டு வெளியே வந்தார்...  ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் டீ கடைக்கு சென்று..  அண்ணே ஒரு டீ.. என்ன சார் வேர்த்து போய் இருக்கீங்க... என்னாச்சு என்று டீ கடைக்காரர் விசாரித்தார்..  அத ஏன் கேட்கறீங்க ஒரு அக்கியூஸ்ட் சவர அளவுக்கு அடிச்சு  பாத்தச்சு வாயே தோரக்கலா அப்படியா என்ன அவன் மனுசனா இல்ல மிருகமா... என்று சொன்னவர் அவசரமாக சார் உங்க ஸ்டேஷன் ல இருந்து யாரோ ஓடுறான்..  அதை பார்த்த இன்ஸ்பெக்டர் அது சிறையில் இருந்த அந்த கைதி..  வேகமாக துரத்தி கொண்டு ஓடினார் அவர் ஓடுவதை பார்த்த மத்த போலீஸ் எல்லாம் சேர்ந்து துரத்த ஆரம்பித்தனர்.. அவன் சந்து சந்தான பாதையில் அங்கேயும் இங்கேயும் ஓடினான்..  விடாமல் துரத்திய போலீசார்  ஒரு இடத்தில் அவனை

நீல இரத்தம் episode 10

  சந்திர போஸ் அரசு மருத்துவ மனையில் ரிப்போர்ட் பத்தி கேட்டுட்டு இருந்தார் டாக்டர் இந்த போட்டோ ல இருக்கிற மாதிரி மச்சம் இதுக்கு முன்னாடி வந்த dead body ல இருந்துச்சு தான ஆமா sir. இதுல இன்னொரு விசியம் 3 body லயும் ஒத்து போகுது sir.. என்னது என்று நெற்றி போட்டு விரிய கேட்டார் 3 body DNA வும் ஒரே DNA sir Blood group கை கால் எல்லாமே கொஞ்சம் கூட மாறல sir...  அது எப்படி முடியும்..... என்று குலப்பத்தோடு கேட்டார்.. அதான் எங்களுக்கும் புரியல sir..  Research பண்ணிட்டு இருக்கோம் செத்தவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல செத்து இருக்காங்க இவங்கள பத்தி எந்த டீடெயில்ஸ் ம் தெரியல  செத்தவங்களை பத்தியும் தெரியல கொலை பண்ணவன பத்தியும் தெரியல காணாமல் போனவங்க complaint செக் பண்ணி பாத்தா இந்த அடையாளத்தொட யாரும் complaint குடுக்கலை...  அடுத்த ஸ்டெப் எப்படி வைக்கிறது னு ஒண்ணுமே புரியல.... என்று புலம்பி கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர்... ஏன் டாக்டர் எனக்கொரு சந்தேகம். என்ன சொல்லுங்க இரட்டை பிறவியாக இருந்தால் DNA ஒண்ணா இருக்குமா லட்சத்துல ஒருத்தருக்கு இருக்கும் sir ஆனால் இங்க பாத்திங்கனா 3 பேர் இருக்காங்க மச்சம் கூட

நீல இரத்தம் episode 9

  சுபாஷ் வீடு ஜனா கேட்டான் என்னடா இது இது cube டா ஆனா அது டிபரெண்ட் கலர் ல இருக்கும் ஆனா இது எல்லாம் ஒரே கலர் ல இருக்கு அதான் என்ன பண்றது னு தெரியல but அங்க அங்க கோடு கோடா இருக்கு. என்னனு ஒன்னும் புரியல டா என்றான் நான் கூட புதையல் இருக்கும்னு நினைச்சேன் டா சரி வரியா லைப்ரரி வரைக்கும் போலாம் என்றான் சுபாஷ் போடா நான் வரல புக் பாத்தாலே எனக்கு ஆகாது. என்றான் ஜனா லைப்ரரி அண்ணா... என்றான் சுபாஷ் வா சுபாஷ் என்று சொன்னவர் 35 வயதுக்கு உண்டான தேகம் இடது கை இல்லை வலது கையில் ஏதோ எழுதி கொண்டு இருந்ததற்கான அடையாளமாக பேனா இருந்தது... அண்ணா எனக்கு ஒரு help  சொல்லு சுபாஷ் என்ன புக் னு சொல்லு நான் எடுத்து தரேன் என்றார் அண்ணா cube தெரியுமா  Cube ஆஹ் கலர் காலரா இருக்குமே அதுவா ஆமா அண்ணா அத எப்படி solve பண்றது னு தெரியணும் அதான் கேட்டு போலாம்னு வந்தேன் அண்ணா ஓ அப்படியா ஆனா அதை பத்தி எனக்கு தெரியாதே புக் கூட அதை பத்தி இல்லையே. அப்படியா அண்ணா சரினா ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க என்று சொல்லிட்டு கிளம்பினான் இரவு சுபாஷ் அந்த cube சுத்தி சுத்தி திருகி திருகி பாத்தான் ஆனா எண்ணனே அவனுக்கு புரியல டார்க் பிரவுன் கலர் ல

நீல இரத்தம் episode 8

  மறுநாள் காலை தூக்க கலக்கத்தோடு எழுந்தார்  அவர் வீட்டு டெலிபோன் அலறிக்கொண்டு இருந்தது  கொட்டாவி விட்டுக்கொண்டே ஹலோ போஸ் hear என்று சொன்னார் மறுபுறம் சொன்ன தகவல் கேட்டு போஸ்சின் தூக்க கலக்கம் சுத்தமாக போய் இருந்தது..  வேக வேகமாக ரெடியாகி ஜீப்பை எடுத்து கொண்டு சென்றார் இடம் தண்ணீர் பந்தல் பாளையம்  ஏரிக்கரை ஓரம்..  ஜீப்பை ஏரிக்கரை ஓரம் நிறுத்தி விட்டு மண் திட்டு மேல ஏறி உள்ளே சென்றார்..  மக்கள் அங்கு கூட்டமாக நின்று கொண்டு சலசலப்புடன் பேசிக்கொண்டு இருந்தனர் போலீஸ் uniform பார்த்ததும சற்று எல்லாரும் விலகி நின்றனர்.. அங்கு முகம் சிதைந்த நிலையில் பிணம் மல்லாக்க கிடந்தது..  பிணத்தின் கையை பார்த்ததும் ஒரு வித பரபரப்பு தொற்றி கொண்டது பிணத்தின் விரலில் 3 விரல்கள் வெட்டப்பட்டு இருந்தது....  கான்ஸ்டபிள் பாரன்சிக்கு சொல்லிட்டீங்களா  அப்புறம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எனக்கு இன்னைக்கே வேணும் arrange பண்ண சொல்லுங்க ok va  Ok sir என்று கான்ஸ்டபிள் சொல்லிக்கொண்டு வேகமாக நடந்தார்..  பேசிக்கொண்டு இருக்கும் போது தான் அதை கவனித்தார்..  வேகமாக dead body பக்கத்தில் போய் காலை பார்த்தார். அதில் அருங்கோண வடி

அரசியல் பயணம்

 இதுவரை காணாது  இந்த நாளில் மட்டுமே காண்போம் நம்மை நோக்கி நம் குறைகளை நிவர்த்தி செய்ய அதற்கு தீர்வு காண வருவார்கள் இந்த சலுகை ஒரு மாதம் மட்டுமே நீங்கள் ஓட்டு போடும் வரை  பிறர் செய்த தவறுகளை கூறுவர் தான் செய்த தவறை மறைப்பர் போட்டி போட்டுக்கொண்டு திட்டுவார் அதே போட்டியை நல்லதை செய்வதில் காட்ட மாட்டார்கள் விடியலை நோக்கி செல்வார்கள்  ஆனால் நாம் மட்டும் இங்கேயே இருப்போம் நல்லவர்களுக்கு ஓட்டு போட சொல்வார்கள் ஆனால் யார் நல்லவர்கள் என்பது தான் இங்கே விவாதமே நல்லவனை தேட முடியாது  ஆனால் நல்லவனாக இருக்க முடியும்.. குடிமகனாக ஓட்டு மட்டுமே நம்மால் போட முடியும் நல்லவர்களை கண்டுபிடிக்கவும் முடியாது தேர்ந்தெடுக்கவும் முடியாது நதி போல சாக்கடை கலந்தாலும் சேர்ந்தே பயணிப்போம் வேறு வழி இல்லை .......... குருவை சக்தி....

நீல இரத்தம் episode 7

 சு பாஷும் அவன் நண்பர்களும் மலையோரமாக தேன் எடுக்க சென்று கொண்டு இருந்தார்கள் டேய் மலைல பாறை இடுக்குல அடுக்கு தேன் இருக்கும் டா மேல போலாம் என்றான்  சரி வாங்கடா போலாம் என்று எல்லோரும் மலை மீது ஏறிக்கொண்டு இருந்தனர் ஜனா அவசர அவசரமாக கூப்பிட்டான் டேய் அங்க தான் டா தேன் பூச்சி போய்ட்டு போய்ட்டு வருது அங்க கண்டிப்பா இருக்கும் வாங்கடா என்று சொல்லிட்டு உள்ளே முள் புதர்க்குள்ள போனான் சுபாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளே சென்றார்கள்.. பாறையின் நடுவே ஒரு ஆள் செல்ல கூடிய அளவிற்கு குகை போன்று இருந்தது.. உள்ளே ஒவ்வொருவராக சென்றனர்..  உள்ளே நிறைய தேன் கூடுகள் இருந்தன.  நமக்கு இணைக்கு செம்ம வேட்டை டா ரொம்ப அலையுனும்னு நினைச்சேன் பரவால்ல டா  என்று ஜனா சொன்னான்  வந்த எல்லாரும் ஆமா டா  சரி ஆளுக்கு ஒன்னு எடுப்போம் போய் வேப்பிலை இல்லனா துளசி தலையை பரிச்சுட்டு வாங்க டா என்று இன்னொருவன் சொல்ல வேகமா ஒவ்வொருவரும் தேட ஆரம்பித்தனர்..  சுபாஷ் அந்த சின்ன குகையை சுற்றி பாத்து கொண்டு இருந்தான்.  சின்ன சின்ன பாறையை தொட்டு பார்த்து கொண்டு வந்தான் ஒரு இடத்தில் வந்ததும் நின்றான். திசை காட்டி போல வட்டமாக ஒரு கல் மேலே தொங்கி கொ

நீல இரத்தம் episode 6

 போலீஸ் head ஆபீஸ் டிஜிபி .. வாங்க போஸ் அந்த கொலையை பத்தி ஏதும் தெரிஞ்சதா கொலையானவங்க யார்னு இன்னும் தெரியல sir ஆனா  இந்த கொலை இன்னும் தொடரும்னு தோணுது sir எப்படி சொல்றிங்க செத்தவங்க முகம் சிதஞ்சு இருக்கு அதுல ஒரு ஆளுக்கு 1 விரல் இன்னொரு ஆளுக்கு இரண்டு விரலை கொலை செஞ்சவன் cut பண்ணி எடுத்திட்டு போய் இருக்கான் sir.. இத வச்சு எப்படி கொலை தொடரும்னு சொல்றிங்க.. 2வது ஆள் வெட்டப்பட்ட விரலுக்கு பக்கத்தில் arrow மார்க் போட்டு next னு இருக்கு sir.. Ohh அப்படினா இது சீரியல் killer னு சொல்றிங்க May be sir.. சரி இவனை எப்படி புடிக்கிறது.. கொல்லப்பட்ட இடத்தில் ப்ளூ கலர் ல blood sample கிடைச்சது sir. ப்ளூ கலர் blood ahh... ஆமா sir அத டெஸ்ட் க்கு குடுத்து இருக்கேன்.  இந்த கேஸ் நமக்கு தலைவலியா இருக்க போகுது பொங்க6சீக்ரெட் ah டீல் பண்ணுங்க இது சீரியல் killer னு யார்க்கும் தெரிய வேண்டாம் முக்கியமா பிரஸ்.. Ok sir thank you என்று salute அடித்து விட்டு வெளியே சென்றார்.. போஸ் அடுத்த நாள் காலை...  எங்க இருந்து ஆரம்பிக்கிறது.. கொலையானவங்க யார்னு தெரியல கொலை செஞ்சவன் யார்னு தெரியல..  போஸ் போன் எடுத்து கால் செய்த

நீல இரத்தம் episode 5

  மறுநாள் காலை சுபாஷ் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தான்.. அவன் வீட்டிற்கு பக்கத்தில் ஒரே கூட்டமாகவும் சலசலப்பாகவும் இருந்தது..  என்னவென்று பார்க்க ஆவலாக சென்றான்.  கூட்டத்தை விளக்கி கொன்டு எட்டி பார்த்தான். பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து போனான்...  ரத்த வெல்லத்தில் இருவர் முகம் சிதைந்த நிலையில் கிடந்தனர்..  தூரத்தில் போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டது..  சுபாஷ் கொலை நடந்த இடத்தை நோட்டம் விட்டான்..  ஒரு இடத்தில் நீல நிறத்தில் ஒரு செடியில் வழிந்தோடி கொண்டு இருந்தது அதற்குள் சந்திர போஸ் துரித நடவடிக்கையில் ஈடுபட்டார்  இறந்தவர்கள் யார் ஏதும் துப்பு கிடைக்கிறதா என்று விசாரித்து கொண்டார். யாரை கேட்டும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை..  ஒரு நிமிடம் சுபாஷ் ஐ பார்த்ததும்  சுபாஷ்... என்று கூப்பிட்டார் சுபாஷ் விரைந்தான்.  சொல்லுங்க sir....  இங்க என்ன பண்ற என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். இங்க தான் என் வீடு அதோ அங்க இருக்கு பாருங்க என்று அவன் வீட்டை காட்டினான்..  அப்படியா சரி சரி.. ஆமா நீ தான் நல்ல இன்வெஸ்டிகேசன் நல்லா பண்ணுவியே இந்த கொலையை பத்தி என்ன நினைக்கிற என்று சற்று கிண்டலாகவே கேட்டார்..  கொலை தான் si

நீல இரத்தம் episode 4

 மறுநாள் காலை  வழக்கம் போல் சுபாஷ் ஸ்கூலுக்கு சென்றான் . செல்லும் வழியில் அருகே இருந்த பைகிர்க்க்கு பஞ்சர் ஓட்டும் கடையை பார்த்துக்கொண்டே வந்தான்  அதில் ஒரு வித நிம்மதி அவன் கண்களில் தெரிந்தது... அருகில் இருப்பவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது யோவ் அந்த மெக்கானிக் ஸ்கூல் ல இருந்து மயக்க திருடி இருக்கான். அதான் போலீஸ் அவனை அடிச்சு இழுத்துட்டு போய் இருக்காங்க..  ஏற்கனவே அவன் போற வர பொண்ணுங்கள வம்பிலுத்தட்டு இருந்தான்.. அந்த மயக்க மருந்த வச்சு என்ன செய்ய நினைச்சானோ நல்ல வேலை போலீஸ் புடிச்சுட்டு போயிடுச்சு.... அவங்க பேசுரத கேட்டுட்டே ஸ்கூலுக்குள்ள போனான் சுபாஷ்  போகும்போது அவனோட கிளாஸ் வாத்தியார் கூப்பிட்டார்  சுபாஷ் இங்க வா HM கூப்பிட்டார்.. Sir இதோ வரேன் என்று சொல்லிக்கொண்டு வேகமாக ஓடினான்  HM ரூம் உள்ளே சந்திர போஸ் இருந்தார்..  வா சுபாஷ் உண்ண பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன் என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்.. HM எப்படி சுபாஷ் கரெக்ட் ஆஹ் சொல்லு பாக்கலாம்.. உன்னோட style ல ..  Sir நான் ஸ்கூல் வரும்போதிம் போகும் போதெல்லாம் அந்த மெக்கானிக் அண்ணா எல்லா பொண்ணுங்களையும் ஒரு மாதிரி பாகுரதும் சில்ம

நீல இரத்தம் epdisode 3

  வெளியில் போலீஸ் நிற்பதை பார்த்த முத்துசாமி sir அது என்னவென்று விசாரிக்க கிளம்பினார் ... மாணவர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் சிலர் முடிக்காமல் விட்ட கட்டுரையை எழுத ஆரம்பித்தனர்.. எல்லா வகுப்பு மாணவர்களும் வெளியே வருவதை பார்த்து இவர்களும் மெல்ல கொஞ்சம் கொஞ்சம் பேராக வெளியே வந்தார்கள் அவர்கள் வரும் நேரமும் பீரியட் மணி அடிக்கவும் சரியாக இருந்தது தூரத்தில் மாரிமுத்து sir சைகை காட்டினார் சுபாஷை பார்த்து அதை கண்டதும் வேகமா ஓடினான் அவர் அருகே சென்றதும்.. என்னோட note book இருக்கும் எடுத்துட்டு வா என்று கூறினார் சுபாஷ் அதை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி விரைந்தான்.. ஆனால் அவரை காணோம்... தேடி பார்த்தான் chemistory lap ல அவரோட குரல் கேட்டது வேகமாக உள்ளே போனான் கதவின் அருகே நின்றான் Sir உள்ள வரலாமா என்று கேட்டான் அதை கேட்டு அனைவரும் திரும்பினர் உள்ள இருந்த இன்ஸ்பெக்டர் சந்திர போஸ் எட்டி பார்த்தார்.. மாரிமுத்து sir வாப்பா என்று சொல்லிக்கொண்டு நான் தான் வர சொன்னேன் note book எடுத்து வா னு சொல்லிக்கொண்டு இருந்தார்.. பக்கத்தில் இருந்த chemistory sir கோவிந்தராஜ் சொன்னார் sir குளோரோபார்ம் அப்

நீல இரத்தம் - part 2

  தூரத்தில் ஜனாவின் அம்மா வருவதை பார்த்து கொஞ்சம் பயம் கலந்த கலக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தார்கள் இருவரும் ஜனா அம்மா ஏதோ கத்தி கொண்டே வந்தாள் அருகே வர வர கொஞ்சம் கொஞ்சமாக கேட்டது டேய் அங்க இருக்காதீங்க டா பாம்பு இருக்காம் என்று கத்தி கொண்டே வந்து கொண்டு இருந்தார்கள் கொஞ்சம் நிம்மதியாக இருவருக்கும் இருந்தது அவர்கள் அருகே வந்ததும் ஜனா சொன்னான் அது செத்த பாம்பு மா என்று சொல்லிக்கொண்டே  குச்சியை கையில் எடுத்து அதை அலேக்காக தூக்கினான் பக்கத்தில் இருந்த அக்கா ஐயோ தலை அசையுது பாருன்னு கத்தி கூக்குரல் இட்டாள்.. பிறகு ஒருவழியாக இருவரையும் நம்ப வைத்து அதை தூக்கி தூர எரிந்து விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்.... குளித்து முடித்து விட்டு பள்ளி செல்ல தயாரானார்கள்... கூட இன்னும் 3 friends சேர்ந்து கொண்டார்கள்... செல்லும் வழியில் நடந்த கதைகளை சொல்லலிகொண்டும் சிரித்து கொண்டும் சென்றார்கள்... School 1st bell அடிச்சத்தும் அனைவரும் class க்கு சென்றார்கள்.. 1st பீரியட் தமிழ் வாத்தியார் வந்து கொண்டு இருப்பதை பார்த்ததும் வகுப்பு தலைவன் சுபாஷ் sir வரார் என்று சொன்னதும் வகுப்பறை அமைதி ஆனது.... துளி ச

துப்பறியும் சுபாஷ் சந்திர போஸின் நீல இரத்தம் episode 1

எவ்வளவு problem வந்தாலும் அழட்டிக்கொள்ளாத ஒருவனின் கதை தான் இது சுபாஷ் இவன் மேலே சொன்னது போல எதற்கும் அழட்டிக்கொள்ளதாவன் ஆனால் கொஞ்சம் புத்திசாலி இவன் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளே இக்கதை... இவன் சிறுவயதில் இருந்து ஆரம்பிப்போம் இவன் அவன் அம்மாவை போல அழகிய கருமை நிறம் பார்க்க கொஞ்சம் லட்சணமாகவும் இருப்பான் குழந்தையில் எந்த குழந்தையும் அழகு தான் இல்லையா சரி கதைக்கு வருவோம்... காலை இளஞ்சூடான வெயில் தொடங்க ஆரம்பித்த நேரம் மணி 8 இருக்கும் பல்லு விளக்கி கொண்டே காலை கடனை முடிக்க காடுபக்கமாக கிளம்பினான் சொல்ல மறந்துட்டேன் இது 1998 இல் இருந்து நடக்கும் நிகழ்வு அதுவும் கிராமம் அதனால் டாய்லெட் வசதி எல்லாம் இங்கு இல்லை... அவனும் அவன் நண்பன் ஜனா வும் ஒத்தயடி பாதையில் மெதுவாக நடந்து போனார்கள்.. சுபாஷ் வாரத்துல மொத நாள் ஸ்கூல் போறது நினைச்சலே கஷ்டமா இருக்கு டா என்று ஜனா புலம்பினான் ஆமா டா அதுலயும் இன்னைக்கு 1st பீரியட் தமிழ் டா மாரிமுத்து sir டா கட்டுரை எழுதி வர சொன்னார் ஒரு புள்ளி வைக்கலானாலும் அடி விழும் அதான் டா பயமா இருக்கு என்று இவன் பங்குக்கு புலம்பினான் ஆமா நான் வேற பாதி தான் முடிச்சு இருக்கே